காமன்வெல்த் போட்டிக்காக மாருதி களமிருக்கம் 10 ஹைபிரிட் கார்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாற்று எரிபொருள் கார்களை பிரபலப்படுத்தும் வகையில், இந்த ஹைபிரிட் கார்களை மாருதி தயாரித்துள்ளது.
இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி ஐவி ராவ் கூறுகையில், ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது வணிக ரீதியிலான உற்பத்தியில் இல்லை. இருப்பினும், ஆர்ஐஐஐ, ரிட்ஸ் அடிப்படையிலான எம்.பிவி வகை கார்களை வணிக ரீதியாக தயாரிக்க தீர்மானித்துள்ளோம்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஆர்ஐஐஐ காட்சிக்கு வைக்கபப்ட்டது. ரிட்ஸ் அடிப்படையிலான எம்.பிவி கார்கள் 1.2 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.3 லிட்டர் பியர் அடிப்படையிலான டீசல் என்ஜின்களுடன் கூடியதாக தயாரிக்கப்படும் என்றார்.
ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் வென்சர் என்ற எம்.பி.வி வகை காரை உருவாக்கியுள்ளது. விரைவில் இது சாலைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








