லேன்ட்ரோவர் ப்ரீலான்டர்-2 அசெம்பிளிங் பணிகள் நவம்பரில் தொடக்கம்

முன்பு இந்த சிக்லி தொழிற்கூடத்தை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் டாடா மோட்டார்ஸிடமிருந்து குத்தகைக்கு எடுத்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இக்கூடத்தை டாடாவிடம் திரும்ப ஒப்படைத்தது பென்ஸ்.
தற்போது இங்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள டாடா நிறுவனம், ஜாகுவார் லேன்ட் ரோவருக்கான உபகரணங்களைப் பொருத்தி வருகிறது. இது முடிந்ததும் வருகிற நவம்பர் மாதம் ப்ரீலான்டர் 2 காருக்கான அசெம்பிளிங் பணிகளை தொடங்கவுள்ளது.
ஜாகுவார் லேன்ட்ரோவர் கார் வரிசைகளிலேயே மிகவும் விலை குறைந்த கார் இந்த ப்ரீலான்டர் 2. எனவே இந்த காரை முதலில் இந்தியாவில் அசெம்பிளிங் செய்து களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது டாடா.
சிக்லி கூடத்தில், ஒரு ஷிப்ட்டுக்கு 3500 கார்களை உருவாக்கி அனுப்பி முடியும். இங்கிருந்து உருவாகும் கார்களை அடுத்த ஆண்டு மார்க்கெட்டில் இறக்குகிறது டாடா.
தற்போது ப்ரீலான்டர் 2 காரின் தொடக்க விலையே (எக்ஸ் ஷோரூம், டெல்லி) ரூ. 33.55 லட்சமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் வைத்து அசெம்பிளிங் செய்து வெளியிடும்போது அதன் விலை கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








