மேலும் 11.3 லட்சம் கார்களை திரும்ப் பெறும் டொயோட்டா!

டொயோட்டாவின் புகழ்பெற்ற கார் பிராண்டுகள் கரோல்லா மற்றும் கரோல்லா மாட்ரிக்ஸ். இந்த ரகத்தில் பல மில்லியன் கார்கள் புழக்கத்தில் உள்ளன.
ஆனால் இந்தக் கார்களில் பெரிய அளவில் பழுது ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக 2005 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் தயாரான இந்தக் கார்களை வேகமாக ஓட்டும்போது எஞ்ஜின் திடீரென்று நின்றுவிடுவதாகவும், இது பல முறை விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் புகார்கள் வந்தன.
ஏற்கெனவே டொயோட்டா தயாரித்த 1 கோடி கார்கள் பல்வேறு குறைபாடுகள் காரணமாக உலகின் பல நாடுகளிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இப்போது மேலும் 11.3 லட்சம் கார்களை எஞ்ஜின் குறைபாடு காரணமாக திரும்பப் பெற்றுள்ளது. இந்தக் கார்கள் குறித்து 163 புகார்களை அமெரிக்க போக்குவரத்துத் துறை பெற்றுள்ளது.
இது டொயோட்டா நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே தனது தயாரிப்புகளில் இருந்த குறைபாட்டுக்கு தண்டனையாக 16.4 மில்லியன் டாலர் நஷ்டஈட்டை அமெரிக்க போக்குவரத்துத் துறைக்கு செலுத்தியுள்ளது டொயோட்டா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








