டாடாவைத் தொடர்ந்து குஜராத் செல்லும் ஹூண்டாய்

Hyundai Car Sales
டாடா நானோ கார் தயாரிப்பை குஜராத்துக்கு டாடா மோட்டார்ஸ் மாற்றியதைத் தொடர்ந்து தற்போது ஹூண்டாய் நிறுவனமும் தனது தயாரிப்புப் பிரிவை குஜராத்துக்கு கொண்டு வருகிறது.

குஜராத் மாநிலம் தொலிரா என்ற இடத்தில் இந்த பிரிவை நிர்மானிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் குஜராத் மாநில அரசு வழங்குகிறதாம். இருப்பினும் இறுதி அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

டெல்லி-மும்பை தொழில்சாலை காரிடார் பகுதியில் உள்ளது தொலிரா. கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான தொழிற் பகுதி இது. சிறப்பு தொழில் முதலீட்டு மண்டலமாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதபாத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. இப்பகுதியில் 2வது விமான நிலையத்தை அமைக்க குஜராத் மாநில அரசு திட்டமிட்டுவருகிறது.

குஜராத்தைத் தவிர வேறு சில மாநிலங்களிலும் கூட தயாரிப்புப் பிரிவை தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறது ஹூண்டாய்.

இதேபோல போர்டு இந்தியா நிறுவனமும் கூட குஜராத்தில் தொழிற் பிரிவைத் தொடங்குவது குறித்து பேசி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ள போர்டு நிறுவனம் அதற்கு முன்பு தனது தயாரிப்புத் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

டாடா நிறுவனம் சனந்த் பகுதியில் தனது பிரிவை வைத்துள்ளது. இதைத் தொடர்நது பல்வேறு கார் நிறுவனங்களும் குஜராத்தை நோக்கி வண்டியைத் திருப்ப ஆரம்பித்துள்ளன.

இதற்கிடையே, ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ரூ. 400 கோடி முதலீட்டில் என்ஜின் தயாரிப்புப் பிரிவை அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்கவுள்ளதாம். அங்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் என்ஜின்கள் தயாரிக்கப்படும்.

தற்போது இந்தியாவில் ஓடிக் கொண்டிருக்கும் ஐ20, வெர்னா ஆகிய கார்களுக்கான என்ஜின்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் தொழிற்சாலையிலிருந்தே தற்போது வருகிறது. இதை மாற்றி இங்கேயே அவற்றைத் தயாரிக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள தனது உற்பத்திப் பிரிவை மேம்படுத்தவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இங்கு மேலும் 3 புதிய மாடல்களை தயாரிக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2009ல் 5.6 லட்சம் கார்களை விற்றது ஹூண்டாய்த. 2011ல் 6.3 லட்சம் கார்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளதாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 30, 2010, 13:26 [IST]
English summary
Hyundai Motor India is making its steps into Gujarat lands by erecting its plant there. The company officials have located Dholera site in this regard and the Gujarat government officials have extended their co-operation. Though the officials of Hyundai were impressed with the site, confirmation about the plant is yet to be made from both sides. The company officials have sent their report to the apex body which is likely to make a decision.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+