150 மெர்சிடீஸைத் தொடர்ந்து 101 பிஎம்டபுள்யூ வாங்கும் ஔரங்காபாத்

ஏற்கனவே ஒரே நேரத்தில் ரூ. 65 கோடி மதிப்பிலான 150 மெர்சிடீஸ் பென்ஸ் கார்கள் வாங்கி சாதனை படைத்தது இந்த நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை தொழில் அதிபர்கள், டாக்டர்கள், கட்டிட அமைப்பாளர்கள் உள்ளிட்ட சிந்தனையொத்தவர்கள் 101 பேர் சேர்ந்து ஒரே நாளில் 101 பி.எம்.டபுள்யூ கார்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தொழில் அதிபர் பங்கஜ் அகர்வால் கூறுகையில்,
கடந்த சனிக்கிழமை அன்று புனேயில் உள்ள பவாரியா மோட்டார்ஸில் 101 கார்களுக்கான முன்பதிவு செய்யப்பட்டது. இதில் 50-60 3-சீரீஸ் கார்கள், 15 5-சீரீஸ் கார்கள், 10 எக்ஸ்-5 சீரீஸ் கார்கள் மற்றும் 3 எக்ஸ்-6 சீரீஸ் கார்கள் அடக்கம். இவை வரும் ஜனவரியில் எங்களுக்கு கொடுக்கப்படும்.
மொத்தமாக இத்தனை கார்களுக்கு முன்பதிவு செய்தததால் சலுகைகள் கிடைப்பதைத் தவிர்த்து ஔரங்காபாத்தை சர்வதேச வரைபடத்தில் முக்கியத்துவம் பெறச் செய்வதே எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications