கார்-பைக் விற்பனை: பிப்ரவரியில் சாதனை!

By
Zen Estilo
டெல்லி: உள்நாட்டு ஆட்டோமொபைல் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை நடந்துள்ளது.

கார் விற்பனை 33 சதவீதமும், பைக் விற்பனை 31 சதவீதமும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 87 சதவீதமும் கூடுதலாக விற்றுள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று டெல்லியில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய உள்நாட்டு சந்தையில் பிப்ரவரி மாதத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை 30.72 சதவீதம் அதிகரித்து 6 லட்சத்து 42 ஆயிரத்து 419 யூனிட்டுகள் விற்றுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த மோட்டார் சைக்கிள் விற்பனை 4 லட்சத்து 91 ஆயிரத்து 451ஆக இருந்தது.

ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகனங்கள் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 32.78 சதவீதம் உயர்ந்துள்ளது. பிப்ரவரியில் மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 653 இருசக்கர வாகனங்கள் விற்றுள்ளன.

வர்த்தக பயன்பாட்டுக்கான மோட்டார் வாகனங்கள் 87.11 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வர்த்தக பயன்பாட்டுக்கான வாகனங்கள் விற்பனை 31 ஆயிரத்து 11ஆக இருந்தது.

ஆனால் பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 24 என அதிகரித்துள்ளது.

கார், இருசக்கர வாகனம் என ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 34.98 சதவீதம் கூடியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஆட்டோமொபைல் விற்பனை எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 17 என இருந்தது.

தற்போது, கடந்த பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனை 11 லட்சத்து 29 ஆயிரத்து 783ஐ தொட்டுள்ளது.

இதற்கு முன்பு ஆட்டோமொபைல்களின் ஒரு மாத விற்பனை அதிகபட்சமாக 11 லட்சத்து 14 ஆயிரத்து 157 என்ற அளவில் இருந்தது. தற்போது கடந்த பிப்ரவரி மாத விற்பனை இந்த சாதனையை முறியடித்துள்ளது.

பாசஞ்சர் கார் பிரிவிலும் கடந்த மாதம் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு 33.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 845 பாசஞ்சர் கார்கள் விற்பனையாகின. இதற்கு முன்பு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 905 கார்கள் என்ற இலக்கை கார் நிறுவனங்கள் தொட்டிருந்தன.

மத்திய பொது பட்ஜெட்டில் வரி உயர்வு அறிவிக்கப்படும் என ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் செய்திகள் வெளியானதால், ஏராளமானோர் திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே வானகங்களை வாங்கியதே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 8, 2010, 13:52 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+