இந்தியாவில் இந்தாண்டு 50 கார்கள் விற்க ரோல்ஸ் ராய்ஸ் இலக்கு

கோஸ்ட், பேன்டம், குட்வுட் ஆகிய மூன்று ரக கார்களை இந்தியாவில் களம் இறக்கியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ். இந்த வகை கார்கள் ஐம்பதை இந்தியாவில் இந்தாண்டு விற்க தீர்மானித்துள்ளதாம் ரோல்ஸ் ராய்ஸ்.
இதுகுறித்து மேற்கு மற்றும் தென் பிராந்தியத்துக்கான ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கான டீலரான நவ்னீத் மோட்டார்ஸ், நிறுவன இயக்குநர் சரத் கச்சாலியா கூறுகையில்,
பல புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது ரோல்ஸ் ராய்ஸ். ஆர்டர் கொடுத்து 2 முதல் 3 மாதங்களுக்குள் கார்கள் டெலிவரி கொடுக்கப்படும்.
இளம் தொழிலதிபர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அவர்கள்தான் பெருமளவில் ரோல்ஸ் ராய்ஸை நாடி வருகிறார்கள்.
முன்பெல்லாம் பெரும் பெரும் பணக்காரர்கள் மட்டுமே இதை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். சுதந்திரத்திற்கு முன்பு விற்கப்பட்ட 90 கார்கள் இன்னும் கூட நல்ல பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications








