மைலேஜ் விவரங்களை வெளியிடும் கார் நிறுவனங்கள்!

தங்களது கார்கள் மற்றும் வாகனங்களின் மைலேஜ் விவரங்களை வருகிற அக்டோபர் மாதம் முதல் வெளியிட கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கழகத் தலைவர் பவன் கோயங்கா கூறுகையில், அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும் வருகிற அக்டோபர் மாதம் தங்களது தயாரிப்பு வாகனங்களின் மைலேஜ் விவரங்களை வெளிப்படையாக வெளியிடவுள்ளன.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கவுள்ள வாகனங்களின் மைலேஜ் விவரங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். எந்த வாகனத்தின் மைலேஜ் சிறந்தது என்பதை அறிந்து வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு அது உதவியாக இருக்கும்.
எந்த வாகனத்தை வாங்கினால் எரிபொருள் சேமிப்புக்குச் சிறந்தது என்பதையும் முடிவு செய்ய இது உதவும். இந்த முடிவை அமல்படுத்த முதலில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயங்கின. தற்போது அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த நடைமுறையை, மத்திய மின்துறை, எரிபொருள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமல்படுத்தும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications








