வாகனங்களின் விலையை உயர்த்தியது மகிந்திரா அன்ட் மகிந்திரா

அதிகபட்சம் ரூ. 8000 வரை விலை உயர்ந்துள்ளது. கச்சாப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், பிஎஸ் 3 தர கட்டுப்பாட்டு விதிகளை பூர்த்தி செய்யவும் கூடுதல் செலவு பிடிப்பதால் இந்த விலை உயர்வு என மகிந்திரா தெரிவித்துள்ளது.
அதன்படி வாகனங்களுக்கேற்ப ரூ. 3000 முதல் 8000 வரை விலை உயர்ந்துள்ளது.
மகிந்திரா மட்டுமல்ல, டாடா மோட்டார்ஸும் கூட விலையை உயர்த்தும் யோசனையில் உள்ளதாம். ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே 1.2 சதவீத விலை உயர்வை அறிவித்து விட்டது. ஆல்டோ கார் விற்பனை அள்ளிக் கொண்டு போகும் நிலையிலும், மாருதியும் கூட விலையை ரூ. 7500 வரை உயர்த்தியுள்ளது. இருப்பினும் ஆல்டோ விலையை மட்டும் அது உயர்த்தவில்லை.


Click it and Unblock the Notifications








