ரூ. 3.03 லட்சத்துக்கு மாருதி ஆல்டோ

மாருதி ஆல்டோ கே10 காரான 1000 சி கே வரிசை என்ஜின் பொருத்தப்பட்டது. இதன் விலை ரூ. 3.03 லட்சமாகும் (எல்எக்ஸ்ஐ வகைக்கு). விஎக்ஸ்ஐ வகையின் விலை ரூ. 3.16 லட்சமாகும்.
இந்தக் கார்களுடன் மாருதி ஆல்டோ (800 சிசி) மற்றும் ஆல்டோ கே 10 (1000 சிசி) ஆகியவையும் தொடர்ந்து விற்கப்படும்.
ஆல்டோ கே 10 காரின் சிறப்பம்சம் 1.0 லிட்டர் கே10பி என்ஜின் ஆகும். இந்த வகை என்ஜின் ஏற்கனவே ஏ-ஸ்டார், எஸ்டிலோ, வேகன் ஆர் ஆகியவற்றில் பொருத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
செவர்லட் ஸ்பார்க்ஸ ஹூன்டாய் சான்ட்ரோ ஆகியவற்றுடன் போட்டியிடும் தகுதியை தற்போது ஆல்டோ கே10 பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 20.2 கிலோமீட்டர் ஆகும்.
காரின் இன்டீரியர், ஸ்டீயரிங் வீல், கியர் நாப் உள்ளிட்டவற்றில் நிறைய மாற்றங்களுடன் கே10 வந்துள்ளது.
மேலும் ஹெட்லாம்ப்புகள் பெரிதாக்கப்பட்டுள்ளன. புதிய பாக் லாம்ப்புகளும் இடம் பிடித்துள்ளன.
சுருக்கமாக கூற வேண்டுமானால் இதை பாக்கெட் ராக்கெட் கார் எனலாம்.


Click it and Unblock the Notifications








