செப்டம்பரில் வரலாறு காணாத விற்பனையைக் கண்ட மாருதி
டெல்லி: செப்டம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவிலான விற்பனையை செய்து சாதனை படைத்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
மாருதி நிறுவனத்தின் செப்டம்பர் மாத, விற்பனையில் இது ஒரு புதிய சாதனையாகும். அதாவது இந்த செப்டம்பர் மாதம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 6 கார்களை விற்றுள்ளது மாருதி. இது கடந்த ஆண்டை விட 29.65 சதவீதம் உயர்வாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 83 ஆயிரத்து 306 கார்களை மட்டுமே மாருதி விற்றிருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை அளவு 1 லட்சத்து 4 ஆயிரத்து 791 ஆகும்.
மேலும் மாருதி நிறுவன வரலாற்றில், ஒரு நிதியாண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை, மாதாந்திர விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியிருப்பது இது நான்காவது முறையாகும்.
உள்ளூர்ச் சந்தையில் மாருதியின் விற்பனை அளவு 95 ஆயிரத்து 148 கார்களாகும். இது 32.90 சதவீதம் அதிகுமாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 71,594 ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications