மாருதி ஸ்விஃப்ட்... அடுத்த மாடல் ரெடி!

இந்த கார் இங்கிலாந்தில் வரும் கோடையில் ரிலீஸாக உள்ளது. புதிய மாடல் ஸ்விஃப்ட் கார்களை பெருமளவு தயாரிப்பது குறித்து சமீபத்தில் ஹங்கேரியில் சர்வதேச முன்னோட்டக் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியது மாருதி சுஸுகி. ஹங்கேரியில் உள்ள மேக்யார் சுஸுகி கார்ப்பொரேஷன் தொழிற்சாலையில் இந்த புதிய மாடல் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்தப் புதிய மாடல் இன்னும் ஸ்லிம்மாக, வலுவாக, அதிக திறன் கொண்டதாக இருக்கும். அதே நேரம் அதிக பயணிகளை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்விஃப்ட் மாடலை கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மாருதி நிறுவனம். அன்றுமுதல் நடுத்தரக் கார்கள் பிரிவில் மார்க்கெட் லீடராக உள்ளது. வழக்கத்தைவிட 90 எம்எம் அதிக நீளம், வீல் பேஸில் 50 எம்எம் அகலம் கொண்டதாக ஸ்விஃப்டின் புதிய மாடல் அமைந்துள்ளது.
இந்தப் புதிய மாடல் ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் எஞ்ஜின் திறன் கொண்டது. பெட்ரோல் தவிர, 1.3 லிட்டர் டீஸல் எஞ்ஜினிலும் ஸ்விஃப்ட் கிடைக்கிறது. 1 காலன் பெட்ரோலுக்கு 56.5 மைல் திறன் கொண்டது இந்தப் புதிய ஸ்விஃப்ட் (1 காலன் = 3.78 லிட்டர்). டீஸல் எஞ்ஜின் ஸ்விப்ட் காலனுக்கு 67.3 மைல் மைலேஜ் தரும் என நிரூபிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








