இந்தியாவில் உற்பத்தி மற்றும் டீலர்களை அதிகரிக்கும் பிஎம்டபிள்யூ!

அதன் ஒரு கட்டமாக, சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ கார் உற்பத்தித் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை 3000-லிருந்து 5400 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு பொறுப்பாளர் ப்ராங்க் பீட்டர் கூறுகையில், "பிஎம்டபிள்யூ கார்களுக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் உள்ளது. மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கு்ம் உத்தியைத்தான் இங்கு பயன்படுத்தி வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இப்போது உற்பத்தியை அதிகப்படுத்துகிறோம்" என்றார்.
இதே பாணியில்தான் சீனா மற்றும் அமெரிக்காவிலும் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் அதிகரிக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய மாடல்களைத் தயாரிக்கும் பணியை வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கவிருப்பதாகவும் பிராங்க் பீட்டர் கூறினார்.
உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரம் வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் புதிய மையம் ஒன்றையும் சென்னையில் அமைக்கிறது பிஎம்டபிள்யூ. இதற்கான இடமும் ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விற்பனையில் அதிக கவனம் செலுத்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2009-ல் 3301 கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருந்த இந்த நிறுவனம், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை இருமடங்காக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தங்கள் நிறுவனத்துக்குள்ள டீலர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது பிஎம்டபிள்யூ.
2007-ம் ஆண்டு இந்தியாவில் சென்னையில் தனது சொந்த தொழிற்சாலையில் உற்பத்தியைத் துவக்கிய பிஎம்டபிள்யூ, தற்போது பிஎம்டபிள்யூ 3 மற்றும் 5 சீரிஸ் கார்களை இந்திய சந்தைக்கென்றே வடிவமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








