ரூ 20 லட்சத்தில் 'பிஎம்டபிள்யூ எக்ஸ் 1'!

இதோ பிஎம்டபிள்யூ நிறுவனம் உங்களுக்காகவே ஒரு காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 - இந்த கார் அனைத்து சொகுசு வசதிகளையும் கொண்ட மாடல். பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்துள்ள மிகக் குறைந்த விலை (!!) கார் இதுதான். சென்னை தொழிற்சாலையில் தயாராகியுள்ள இந்த கார் சமீபத்தில்தான் அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்று, விற்பனைக்கு தயாராக உள்ளது.
5 நிறங்களில் டீஸல் எஞ்ஜின் மாடல்களில் கிடைக்கும் இந்த கார், அதிகபட்சம் 177 பிஎச்பி, 4000 ஆர்பிஎம் திறன் கொண்டது. இதன் இரண்டாவது மாடல் 204 பிஎச்பி, 4400 ஆர்பிஎம் மணிக்கு 240 கிமீ வேகத்தில் பறக்கலாம். ஏபிஎஸ் வசதி, சைல்ட் லாக், சென்ட்ரல் லாக்கிங் வசதிகள் கொண்டது இந்த புதிய மாடல்.


Click it and Unblock the Notifications








