ஹூண்டாய் கெட்ஸுக்கு 'பை பை'!

சிறிய ரகக் கார்களில் பிரிமியம் மாடலாக வெளி வந்தது கெட்ஸ் கார்கள்தான். இதன் மேம்பட்ட வடிவங்கள்தான் ஐ10 மற்றும் ஐ20 போன்றவை.
கெட்ஸ் அறிமுகமானபோது அதன் விலை ரூ 4.5 லட்சத்துக்கும் மேல். ஆனால் இன்று அதே விலைக்கு ஐ10 ரகக் கார்கள் இன்னும் அதிக வசதிகளோடு கிடைப்பதால் கெட்ஸுக்கு கிராக்கி இல்லை.
மாருதியின் ஸ்விஃப்ட் ரகக் கார்களுக்கு கடும் போட்டியைத் தரும் கெட்ஸ் என நம்பினர். ஆனால் தரத்திலும் விற்பனையிலும் ஸ்விப்ட் உச்சாணிக் கொம்பில் நிற்கிறது. மாதம் 12000 கார்கள் விற்கின்றன. ஆனால் கெட்ஸ் சில ஆயிரம் எண்ணிக்கையைக் கூடத் தாண்டவில்லை.
எனவே கெட்ஸ் ரக உற்பத்தியை முன்பே நிறுத்திவிட்டது. இப்போது அதற்கான உதிரிபாக உற்பத்தியையும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஐ10, ஐ20 ரகக் கார்கள் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது ஹூண்டாய்.
ஹூண்டாய் அறிமுகப்படுத்திய அனைத்து ரகங்களுமே இந்தியாவில் வெற்றிகரமான கார்களாகத் திகழவில்லை. அதன் பிரிமியம் ரகக் கார் டெர்ரகான் படுதோல்வியடைந்தது. ஆக்ஸன்ட் கொஞ்ச காலம் நன்றாக விற்று பின் மார்க்கெட்டிலிருந்தே வழக்கொழிந்தது. எலான்ட்ரா எனும் ஆடம்பரக் கார் வந்த வேகத்தில் நிறுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications








