மாருதி, ஹூண்டாய் கார்களில் விலை உயரும்!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது கார்களில் விலை இரண்டு சதவீதம் வரை உயரும் எனக் கூறியுள்ளது.
மத்திய பட்ஜெட்டை அமைச்சர் பிரனாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததை அடுத்து இந்த விலைமாற்றம் தவிர்க்க முடியாதது என மாருதி சுசுகி இந்தியா நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா கூறினார்.
அதுபோல ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும் தனது கார்களின் விலையில் ரூ.6ஆயிரத்து 500 முதல் ரூ.25 ஆயிரம் வரை ஏற்றம் இருக்கும் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








