யுஎஸ் சந்தைக்கேற்ற எலெக்ட்ரிக் ஃபியட் 500 - க்ரிஸ்லர் தயாரிக்கிறது

By
Electric Fiat 500
டெட்ராய்ட்: அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான க்ரிஸ்லர், ஃபியட் 500 எலெக்ட்ரிக் வெர்ஷன் மாடலை அமெரிக்காவில் தயாரிக்க உள்ளது. அடுத்தாண்டில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு ஃபியட் மற்றும் க்ரிஸ்லர் இணைந்ததை அடுத்து மேற்கொள்ளப்படும் மிக முக்கிய முயற்சியாக இந்த எலெக்ட்ரிக் பியட் 500 தயாரிப்பு கருதப்படுகிறது.

ஃபியட் 500ன் எலெக்ட்ரிக் வெர்ஷன் குறித்து இந்தாண்டு துவக்கத்தில் வட அமெரிக்க ஆட்டோ ஷோவின் போதே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் பற்றி க்ரிஸ்லர் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, 'ஃபியட் 500 எலெக்ட்ரிக் மாடலில் லித்தியம் - அயர்ன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் கட்டுப்பாடு இன்ஜின்கள் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு தயாராக உள்ளன.

அமெரிக்காவில் ஃபியட் 500 எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தாண்டு தயாரிக்கப்படும். 2012ல் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைக்கு அமெரிக்க சந்தைக்கு ஏற்ப இந்த மாடல் வடிவமைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரிட்டனில் தயாரிப்பை தொடங்குவது குறித்து தற்போதையும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க இயலாது' என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 27, 2010, 11:06 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+