இந்தியாவில் 1 லட்சம் செவர்லே ஸ்பார்க் கார்கள் விற்பனை

Chevrolet Spark
டெல்லி: இந்தியாவில் 1 லட்சம் செவர்லே ஸ்பார்க் கார்களை விற்றுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம்.

இது ஒரு சாதனை அளவாகும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் பாலேந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச அளவில் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹலோல் (குஜராத்), தலேகான் (மகாராஷ்ரா) ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த ஆண்டு உற்பத்தி திறன் 2.25 லட்சம் கார்களாகும்.

இந்நிறுவனம் கடந்த 1996-ஆம் ஆண்டில் இந்தியாவில் களம் இறங்கியது. செவர்லே என்ற பிராண்டில் எட்டு வகை கார்களை தயாரித்து வருகிறது.

மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்கும் வகையில் இந்நிறுவனம் ரேவா நிறுவனத்துடன் கூட்டு ஏற்படுத்தி, இ-ஸ்பார்க் என்ற மின்சார கார்களைத் தயாரிக்கவுள்ளது. இந்தக் கார்கள் இந்தஆண்டு இறுதிக்குள் வெளிவரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 29, 2010, 13:11 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+