டாடாவில் பங்குகளை விற்கும் டெய்ம்லர்!
மும்பை: ஜெர்மனியின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் டெய்ம்லர், டாடா மோட்டார்ஸில் இருக்கும் தனது 5.34 சதவிகித பங்குகளை விற்பதாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸில் மொத்தம் 2.56 கோடி பங்குகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், அவற்றை ரூ 2050 கோடிக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது.
நடப்பு விலையில் குறிப்பிட்ட சதவிகித தள்ளுபடியில் இந்த பங்குகளை டெய்ம்லர் விற்கிறது. இன்றைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ரூ 737 முதல் 761 வரை விற்பனையாகின.
இந்தப் பங்குகளை விற்கும் பொறுப்பு சிட்டி வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுபற்றி கருத்து கூற டெய்ம்லர் மற்றும் டாடா மோட்டார்ஸ் மறுத்துள்ளன.


Click it and Unblock the Notifications








