பிரிட்டீஸ் ஜி.பி. யில், போர்ஸ் இந்தியா அணியை உற்சாகப்படுத்தும் தீபிகா

போர்ஸ் இந்தியா அணியின் டிரைவர்களான ஏட்ரியன் சுதில், டோனியோ லியுஜி நாளை இங்கிலாந்தில் நடக்கும் பிரிட்டீஸ் ஜி.பி. யில் பங்கேற்க உள்ளனர். இவர்களை உற்சாகப்படுத்துவதற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே போட்டி நடக்கும் இடத்திற்கு செல்லவுள்ளார்.
இன்று நடந்த தகுதி சுற்றில் போர்ஸ் இந்தியா அணியை உற்சாகப்படுத்திய தீபிகா, போட்டி நடக்கும் இடத்தில் இருக்கும் அனுபவமே தனி என்று கூறியுள்ளார். இந்த அணியை விஜய் மல்லையா தொடங்கியதில் இருந்து இது தான் அவருக்கு மிகவும் பிடித்த அணியாம்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மல்லையாவின் பெங்களூர் அணியை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார் தீபிகா. கூடவே மல்லையாவின் மகனும் இருந்தார். இதை வைத்து இருவருக்கும் காதல் என்றுகூறினார்கள். இப்போது மல்லையாவின் போர்ஸ் இந்தியா அணியை உற்சாகப்படுத்த கிளம்பியுள்ளார் தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








