ஆட்டோ எக்ஸ்போ 2010... ஒரு ப்ளாஷ்பேக் ஷோ!

By
Auto Expo 2010
டெல்லி: தலைநகரில் இருக்கும் கார் பிரியர்களால் மறக்கமுடியாத வண்ணமிகு கண்காட்சியாக அமைந்துள்ளது 'டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2010'.

உலகின் தலைசிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் அத்தனை தயாரிப்புகளும், வரப்போகிற புதிய மாடல்களும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கூடவே, பணக்கார பெருசுகளின் நினைவுகளை மிதக்க வைக்கும் பழை..ய கார்களும் பைக்குகளும் கூட காட்சிக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

1904-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஜெர்மன் கார்கள் மற்றும் பைக்குகளுடன், 1934-ம் ஆண்டு தயாரான ரோல்ஸ்ராய்ஸ், 1950களில் பிரபலமாக இருந்த பிஎம்டபிள்யூவின் குட்டிக்கார் போன்றவையும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இன்றைய தேதிக்கு குட்டிக்கார் எனப்படும் டாடா நானோவை விட சின்ன கார் ஒன்றை 1950லேயே தயாரித்துள்ளது பிஎம்டபிள்யூ. இதற்கு பெயர் ஐஸெட்டா.

இருவர் மட்டுமே பயணிக்கும் இந்தக் கார்தான் இந்த வின்டேஜ் பிரிவில் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

2.29 மீட்டல் நீளம், 1.37 மீட்டர் அகலம் மட்டுமே கொண்ட இந்தக் கார், நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டுமே கிடைத்தன. இன்றும் அதன் ஒரிஜினல் நிறம் மாறாமல் அவற்றை பாதுகாத்து வருகின்றனர். இதன் திறன் வெறும் 300 சிசிதான். ஒரு மோட்டார் சைக்கிளின் வேகம்தான் என்று வைத்துக் கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் செவர்லே இம்பாலா கார் என்றால் அடேங்கப்பா என்று வாய்ப் பிளப்பார்கள். 1962 மாடல். இப்போது இப்படியொரு காரை டெல்லியின் அங்குர் பாட்டியா வைத்துள்ளார். காரேஜுக்கு வெளியே கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் காரை வாங்கி, இரண்டு ஆண்டுகள் அதன் ஒரிஜினல் ஸ்பேர்களை தேடித் தேடி வாங்கி முழுமையான வடிவம் தந்துள்ளார்.

"நான் வாங்கும் போது இதற்கு மதிப்பு இல்லை... இப்போதோ விலைமதிப்பு அதிகம் கொண்ட அற்புதமான காராகிவிட்டது. நிச்சயம் இதற்கு மதிப்பு சொல்ல முடியாது!" என்கிறார் பெருமையுடன்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 10, 2010, 11:03 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+