மீண்டும் சிறிய காரை அறிமுகப்படுத்தும் பீயட்

யூனோ மாடலின் அடிப்படையில் இந்த கார் வரும் டிசம்பரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் பல நிறுவனங்களும் சிறிய கார்கள் விற்பனையில் சாதனை படைத்து வரும் நிலையில் பீயட்டும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டதால், பீயட் யூனோ கடந்த 2000ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதற்குப் பதிலாக அறிமுகமான பீயட் பாலியோவும் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து சமீபததில் பெரிய ரக கார்களை களமிறக்கிய பீயட் வெற்றி கண்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் சிறிய கார் தயாரிப்பில் இறங்கவுள்ளது.
இப்போது பிரேசிலில் தான் யூனோவை தயாரித்து விற்று வருகிறது பீயட்.


Click it and Unblock the Notifications








