ஃபோர்ட் எண்டேவரின் ஏடி மாடல்!

மேலும், காரின் முகப்பு தோற்ற வடிவமைப்பு, விளக்குகளின் அழக போன்றவற்றில் மெல்லிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காரின் உட்புறத்தில் ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் அழகிய மர வேலைப்பாடுகளும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
மூன்று வரிசை இருக்கை வடிவமைப்பு, அலுமினியம் பெடல், தலைக்கு மேலே எல்சிடி திரை, சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற சிறப்பம்சங்களும் இதில் உள்ளன.
என்ஜினைப் பொறுத்தவரை முந்தைய மாடல்களில் இருந்து வித்தியாசம் எதுவும் இல்லை. எனினும் 5-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பிரத்தியேகமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டோமேடிக் பாக்ஸினால் தண்டர் பிளஸ் மாடலை விட வேகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை. அதிகபட்சமாக மணிக்கு 174 கி.மீ தூரத்தை இப்புதிய மாடல் கடக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
மேனுவல் கியர் பாக்ஸ் மாடலை விட இதில் வேகம் சற்று கூடுதலாகவே கிடைக்கிறது. எனினும் எரிசக்தி சேமிப்பை பொறுத்தவரை ஆட்டோமேடிக் மாடலில் நகர வீதிகளில் லிட்டருக்கு 7.3 கி.மீ மற்றும் நெடுஞ்சாலைகளில் 12.1 கி.மீ அளவுக்கும் மைலேஜ் தருகிறது.
இதனால் ஃபோர்ட் எண்டேவரின் ஆட்டோமேடிக் கியர் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








