இந்தியாவில் 3 மடங்கான போர்ட் கார்கள் விற்பனை!

சமீபத்தில் அறிமுகமான போர்ட் பிகோ கார்கள் மிகப் பிரபலமானதையடுத்து இந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் பெரும் உயர்வை சந்தித்துள்ளது.
இந்த மாதத்தில் போர்ட் மொத்தம் 8,080 கார்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் போர்ட் இந்தியா நிறுவனம் வெறும் 2,168 கார்களைத் தான் விற்றது குறிப்பிடத்தக்கது.
பிகோ அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டரை மாதத்தில் மொத்தம் 20,000 பேர் இதை வாங்க புக்கிங் செய்துள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலை அடுத்த மாதம் முதல் இரண்டாவது ஷிப்ட்டை தொடங்கவுள்ளது. இதன்மூலம் இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும்.
விரைவில் இங்கு 2 லட்சம் கார்களைத் தயாரிக்கும் வரையில் 500 மில்லியன் டாலர் முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கவும் போர்ட் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொழிறசாலையில் சமீபத்தில் 1.2 பெட்ரோல், 1.4 பெட்ரோல் என்ஜி்ன்களைத் தயாரிக்கும் பிரிவு சமீபத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் என்ஜின்களைத் தயாரிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








