ஃபியூசனை நிறுத்துகிறது போர்டு- ஃபிகோ அறிமுகம்

இதுகுறித்து நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநரும், தலைவருமான மைக்கேல் போன்ஹெம் கூறுகையில், விரைவில் ஃபியூசனை நாங்கள் இந்தியாவில் நிறுத்தி விடுவோம். அதற்குப் பதில் குட்டிக் காரான ஃபிகோவின் மீது முழுக் கவனத்தையும் திருப்பப் போகிறோம்.
ஃபியூசனை விட ஃபிகோவுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
ஃபிகோவை மார்ச் மாதம் இந்திய சாலைகளுக்குக் கொண்டு வருகிறது போர்டு. இதன் வணிக ரீதியிலான உற்பத்தி பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் உள்ள போர்டு இந்தியாவின் ஆலையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








