ரூ 3.49 லட்சத்தில் ஃபோர்டு ஃபிகோ அறிமுகம்!

இந்த நிறுவனத்தின் முதல் சிறிய ரகக் கார் இந்த ஃபிகோ. விலை ரூ 3.49 லட்சத்திலிருந்து துவங்குகிறது (டெல்லியில்).
மாருதி ரிட்ஸ், ஹூண்டாய் ஐ 10 -ஐ விட இது குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.
1200 சிசி பெட்ரோல் மற்றும் 1400 சிசி டீஸல் என இரண்டு மாடல்களில் ஃபிகோ கிடைக்கிறது.
அடுத்த ஒன்றரை வருடங்களில் மேலும் சில புதிய ரகக் கார்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக ஃபோர்டு இந்தியா தலைவர் மைக்கோல் போனெஹம் தெரிவித்தார்.
ஃபிகோ முழுக்க முழுக்க சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் தயாராகும் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 2 லட்சம் முத்ல 2.5 லட்சம் வரை கார்கள் மற்றும் என்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்தத் தொழிற்சாலை.


Click it and Unblock the Notifications








