உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல்: போர்டு இந்தியா உற்பத்தி பாதிப்பு

By
Ford Figo
சென்னை: இன்றைக்கு ஆட்டோமொபைல் சந்தையின் நிலவரமும், வளர்ச்சியும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. சொல்லப் போனால், பெருகும் தேவையைச் சமாளிக்க முடியாமல் சில நிறுவனங்கள் திணறுகின்றன என்பதே உண்மை.

ஆனால் போர்ட் இந்தியாவின் நிலைமை மட்டும் தலைகீழாக உள்ளது.

தேவையைச் சமாளிக்கும் அளவுக்கு இந்த நிறுவனத்தால் கார்கள் தயாரித்து அளிக்க முடியவில்லை என்பது, அந் நிறுவன வளர்ச்சிக்கு பெரும் தடையாக நிற்கிறது. இதனால் சென்னை தொழிற்சாலையில் மூன்றாவது ஷிப்டை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள்.

கார் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் உரிய நேரத்தில் கிடைக்காததே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என போர்டு இந்தியா தலைவர் தெரிவித்துள்ளார்.

போதிய உதிரிபாகங்கள் கிடைக்காததால், இந்திய சந்தைகளுக்கென்றே இந்த நிறுவனம் தயாரித்துள்ள போர்டு ஐகான் செடான், பிகோ, என்டவர் எஸ்யுவி போன்று சந்தையில் இருக்கும் மாடல்களைக் கூட சரியாக டெலிவரி செய்ய முடியாமல் திணறுகிறது இந்நிறுவனம்.

இது குறித்து போர்டு நிறுவன தலைவர் கூறுகையில், "சென்னை தொழிற்சாலையில் தற்போதுள்ள ஷிப்டின் மூலம் 1 லட்சத்து 40 ஆயிரம் கார்கள் டெலிவரி செய்கின்றோம். ஆனால் சீராக டெலிவரி கொடுக்க முடியவில்லை. கார் தயாரிப்புக்குத் தேவையான பொருட்கள் உரிய நேரத்தில் கிடைத்தால் மட்டுமே இந்த பிரச்சனை தீரும்," என்றார்.

பயணிகள் கார்களுக்கு பாகங்கள் வழங்கும் நிறுவனங்கள்தான், மற்ற வகை கார்களுக்கும் வழங்குகின்றன. எனவே, போர்டு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, பிற வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கும் இதே தலைவலிதான். ஏற்றுமதி சந்தையில் பெருகிவரும் தேவை, இவர்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இதை எந்த விலை கொடுத்தாவது தீர்க்க அந்நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே எந்த விலை கொடுத்தாவது இப்பிரச்சினையைத் தீர்க்க அந் நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இதற்கிடையே அடுத்த 5 ஆண்டுகளில் 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாம் போர்டு நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 23, 2010, 10:32 [IST]
English summary
Ford is having production constraint and therefore unable to provide consistent delivery. It plans to have 3 shifts in Chennai plant. Amidst this, Ford plans to launch 8 new models in 5 years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+