இந்தியாவில் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் ஜெனரல் மோட்டர்ஸ்

இந்தியாவில் ரேவா நிறுவனத்துடன் இணைந்து வரும் டிசம்பரில் தனது மின்சார கார்களை அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், ரேவாவுடனான கூட்டணி முறிந்ததையடுத்து தானே நேரடியாக மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.
இதற்காக செவ்ரோலெட் வோல்ட் என்ற காரை ஜெனரல் மோட்டர்ஸ் தயாரித்துள்ளது. இதை இந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்துவிட்டு அடுத்த ஆண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வரவுள்ளது.
மேலும் இந்தியாவில் இந்த நிறுவனத்தின் பிற கார்கள் வி்ற்பனை அதிகரித்து வருவதால், மேலும் 700 தொழிலாளர்களை பணியில் சேர்க்கவும் ஜெனரல் மோட்டர்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








