வர்த்தக வாகன தயாரிப்பில் இறங்கும் ஜெனரல் மோட்டார்ஸ்!

வரும் 2012-ம் ஆண்டுக்குள் இந்த வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த வாகனங்களை ஆரம்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப் போவதில்லை ஜிஎம் நிறுவனம். மாறாக சீனாவில் உள்ள தங்களது ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷனில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனை ஜிஎம் நிறுவனத்தின் தலைவர் கார்ல் ஸ்லைம் நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் குஜராத்தில் உள்ள ஹலோல் தொழிற்சாலையிலும் வர்த்தக வாகனங்களைத் தயாரிக்கும் திட்டமுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களை இங்கு உற்பத்தி செய்யும் திட்டமுள்ளது" என்றார்.
இதற்காகவே ரூ 250 கோடி செலவில் குஜராத் ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடந்துள்ளன. இங்கு ட்ரக்குகள், 5 முதல் 6 பேர் உட்காரும் வசதிகொண்ட வேன்களைத் தயாரித்து வெளியிட உள்ளது ஜிஎம்.


Click it and Unblock the Notifications








