உற்பத்தியை இருமடங்காக்கும் ஜிஎம்!

பீட் மற்றும் செடான் க்ரூஸ் கார்களின் உற்பத்தி உடனடியாக இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பாலேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இப்போது மாதம் 6000லிருந்து 12000 ஆயிரமாக உற்பத்தியை அதிகரித்துள்ளோம். இந்தியாவில் ஹலோல், தலேகான் தொழ்ற்சாலைகளில் இந்த உற்பத்தி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மிக விரைவாக மீட்சியடைந்தது எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஹலோல், தலேகான் தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 2.25 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
இப்போதைய நிலவரப்படி, க்ரூஸ் ரக கார்களுக்கு ஏக கிராக்கி. பீட் வகை கார்களுக்கும் நல்ல வரவேற்புள்ளது. இந்தக் கார்களுக்காக இரண்டு மாதங்களாக வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த வளர்ச்சி எங்களுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது" என்றார்.
ஜிஎம் தொழிற்சாலை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொத்தம் எட்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஜிஎம். இவற்றில் லேட்டஸ்ட் அறிமுகம்தான் பீட் மற்றும் க்ரூஸ்.


Click it and Unblock the Notifications








