நானோவுக்கு போட்டியாய் சிறிய கார்-ஜெனரல் மோட்டர்ஸ் திட்டம்

சீனாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் எஸ்ஏஐசி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜெனரல் மோட்டஸ் இந்தியாவின் 50 சதவீத பங்குகளை எஸ்ஏஐசி வாங்கியது.
சீனாவில் ஜெனரல் மோட்டர்ஸ், எஸ்ஏஐசி மற்றும் வியூலிங் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக கார்களைத் தயாரித்து வருகின்றன.
இதி்ல் வியூலிங்கின் மினி வேன்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய ஜெனரல் மோட்டர்ஸ் முடிவு செய்துள்ளது.
ஜெனரல் மோட்டஸ்சின் ஸ்பார்க் ரக கார்கள் மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் சிறிய கார்களுக்கு கடும் போட்டியைத் தந்துள்ள நிலையில் நானோவையும் சமாளிக்க, குறைந்த விலை கார் தயாரிப்பிலும் ஈடுபடவுள்ளது அந்த நிறுவனம்.


Click it and Unblock the Notifications








