வரிசைகட்டும் மாடல்: திக்குமுக்காடும் வாடிக்கையாளர்கள்

By
Fiat Bravo 2
பெங்களூர்: வோக்ஸ்வேகன், பிஎம்டபுள்யூ, ஃபோர்டு, ஃபியட், ஸ்கோடா, மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் டோயோட்டா ஆகிய நிறுவனங்கள் பல புதிய சுவரஸ்யமான மாடல் கார்களை இந்தாண்டில் அறிமுகப்படுத்தி கார் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்ய திட்டமிட்டுள்ளன.

சிறிய ரகம், மிட் சைஸ் மற்றும் சொகுசு கார்கள் என அனைத்து செக்மென்டுகளிலும் பல்வேறு புதிய மாடல்கள் 2010ம் ஆண்டில் வெளியாக தயாராகி வருகின்றன.

மாருதி கிஸாஷி மற்றும் மாருதி செர்வோ:

மாருதி சுசுகியின் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சொகுசு ரக காரான மாருதி கிஸாஷி, அடுத்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.10-12 லட்சம் என மதிப்பிடப்படுகிறது.

மாருதியின் செர்வோ டாடா நானேவுக்கு போட்டியாக சந்தையில் இறக்கப்படுகிறது. ஜூலை மாதம் வெளியாகும் இந்த மாடலின் விலை ரூ.1.5 முதல் 2 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வோக்ஸ்வேகன் போலோ, ஃபீடான்:

இந்திய சந்தைக்கென பிரத்தியேகமாக வோக்ஸ்வேகன் தயாரித்துள்ள நவீன கார்களாக இந்த இரண்டு மாடல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

சொகுசு மாடலான வோக்ஸ்வேகன் ஃபீடான் ரூ.75-78 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படும். லிஃப்ட் பேக் மாடலான போலோ, ரூ.4முதல் 6 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. இரண்டு மாடல்களும் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன.

ஃபோர்டு ஃபிகோ:

ஃபோர்ட் கம்பெனியின் மிட் சைஸ் ரக கார் மாடல்கள் இந்தியாவில் மிகப் பெரிய ரவுண்ட் வந்தன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோர்ட் மிட் சைஸ் கார்களுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.

தற்போது லிஃப்ட் பேக் எனப்படும் ஹேட்ச்பேக் ரகத்தில் ஃபிகோ என்ற புதிய மாடலை குறைந்த விலையில் ஃபோர்ட் அறிமுகப்படுத்துகிறது. மார்ச் மாத இறுதியில் மார்க்கெட்டுக்கு வரும் இந்த காரின் விலை ரூ.3.5 முதல் 5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்1:

மிக ஸ்டைலான, அதே சமயத்தில் விலையும் ஓரளவு குறைச்சலாக இருக்கும் வகையில் பிஎம்டபுள்யூ எக்ஸ்1 மாடல் இந்தியாவில் இந்தாண்டின் அரையிறுதியில் அறிமுகமாகிறது.

ஸ்போர்ட்ஸ் கார் செக்மென்ட்டில் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலையை குறைத்து விற்பனை செய்ய பிஎம்டபுள்யூ திட்டமிட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்1 மாடலின் விலை 25 முதல் 30 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா யெடி:

ஜெர்மனி நிறுவனமான ஸ்கோடா, ஸ்போட்ஸ் ரக காரான 'யெடி'யை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியிடும் என கூறப்படுகிறது.

டாடா சஃபாரி, மாருதி கிராண்ட் விடாரா, ஹோண்டா சிஆர்-வி, ஷெவ்ரோலெட் கேப்டிவா, டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் காலடி வைக்க உள்ளது ஸ்கோடா யெடி.

இதன் விலை ரூ.12 முதல் 16 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்சுபிஷி லான்சர் எவெல்யூஷன் எக்ஸ்:

ஜப்பான் மோட்டார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஏற்கனவே அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சொகுசு கார் செக்மென்டில் மிட்சுபிஷி லான்சர் எவெல்யூஷன் எக்ஸ் என்ற புதிய மாடலை மிட்சுபிஷி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மாடல் இந்தாண்டின் இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தான் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.21முதல் 23 லட்சம் வரை இருக்கும்.

மஹிந்தரா-ரெனால்ட் சாண்டீரோ:

மஹிந்தரா மற்றும் ரெனால்ட் இணைந்து லிப்ட்பேக் மாடல் காரான சாண்டீரோ ரகத்தை இந்தாண்டின் அரையிறுதியில் வெளியிடுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜினிலும் இந்த மாடல் கிடைக்கும். இவற்றின் விலை ரூ.4 முதல் 5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா விஸ்டா எலெக்ட்ரிக், டாடா பிரைமா:

டாடா நிறுவனம் இந்தாண்டில் டாடா இண்டிகா விஸ்டா எலெக்ட்ரிக், டாடா எரியா மற்றும் டாடா பிரைமா ஆகிய மூன்று மாடல்களை சந்தையில் இறக்க தி்ட்டமிட்டுள்ளது.

சொகுசு காரான டாடா பிரைமா இந்தாண்டின் அரையிறுதியில் வெளியாகும். இதன் விலை ரூ.9 முதல் 11 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எரியா என்ற மாடல் ஸ்போட்ஸ் மற்றும் மல்டி யூடிலிட்டி வாகனமாக அமையும் என கூறப்படுகிறது. ஏப்ரலில் வெளியாகும் இந்த மாடலின் விலை ரூ.12 முதல் 14 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா இண்டிகா விஸ்டா எலெக்ட்ரிக் மாடல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத வாக்கில் இந்த மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஆவன்ஸா:

டோயோட்டா நிறுவனம் இந்தாண்டில் ஆவன்ஸா, எடியோஸ் மற்றும் பைரஸ் ஆகிய மூன்று மாடல்களை வெளியிடுகிறது. டொயோட்டா எடியோஸ் சொகுசு மற்றும் லிப்ட்பேக் ஆகிய இரண்டு வடிவங்களிலும் வெளியாகிறது.

சொகுசு கார் முதலிலும் அடுத்தாண்டு லிப்ட்பேக் காரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோயோட்டா ஆவன்ஸா மல்டி யூடில்ட்டி மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதியில் வெளிவரும் இந்த மாடலின் விலை ரூ.6 முதல் 8 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோயோட்டா பைரஸ் ஹைப்ரைட் மாடல் கார், முழு வடிவமைப்புடன் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும். இதன் விலை அறிவிக்கப்படவில்லை.

ஹூண்டாய் ஐ30:

ஹூண்டாய் நிறுவனம் ஐ10, ஐ20 ஆகிய மாடல்களுக்கு அடுத்தபடியாக ஐ30 மாடலை வெளியிடுகிறது. மேலும் ஐ10 மாடலின் எலெக்ட்ரிக் வெரிஷனையும் இந்தாண்டு வெளியிடுகிறது.

ஐ10ன் டீசல் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்கள் இந்தாண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. ஹேட்ச்பேக் மாடலான ஐ30 ஜூன் மாத வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்சென்ட் மாடலி்ன் விலையை ஒட்டியே இதன் விலையும் இருக்கும் என கூறப்படுகிறது.

ஃபியட் பிரேவொ:

ஃபியட் நிறுவனமும் புதிய மாடல்களை இந்திய சந்தையில் இறக்குகிறது. சிறிய ரக காரான பிரேவோ மாடல் செப்டம்பர் மாதத்தில் வெளியாகிறது. விலை ரூ.16 முதல் 18 லட்சம் வரை இருக்கும்.

லினியா டி-ஜெட் என்ற கூடுதல் சக்திவாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலையும்ம் வெளியிட ஃபியட் திட்டமிட்டுள்ளது.

மேலும் டீசல் இன்ஜின்கள் கொண்ட ஃபியட்500 மற்றும் ஹேட்ச்பேக் மாடலான ஃபியட் பன்டோ ஆகிய மாடல்களும் வரவுள்ளன.

இதுபோன்ற ஏராளமான கார்கள் விதவிதமான சிறப்பம்சங்களுடன் கிட்டத்தட்ட ஒரே வரம்பிலான விலையில் சந்தைக்கு வருவது வாடிக்கையாளர்களை பெரும் குழப்பத்தில் தள்ளிவிடுகிறது.

நல்ல மாடலை தேர்வு செய்ய ஏராளமான மாடல்கள் குவிந்திருந்தாலும், முடிவெடுக்க வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுவதாக கார் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

More from DriveSpark

Article Published On: Friday, January 29, 2010, 11:41 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+