ஹோண்டாவின் புதிய 'கான்செப்ட் கார்'

புதிய கான்செப்ட் காரை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவை தேர்ந்தெடுத்தது இதுவே முதல்முறை.
ஹோண்டாவின் இந்த புதிய ரக கார் ஜப்பானில் உள்ள ஹோண்டா ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வடிவமைக்கப்பட்டது.
தொழில்நுட்ப ரீதியில் நவீன அம்சங்களுடனும், வசீகரமான வடிவைப்புடனும் தயார் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், கேபின் அளவில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. பெரியவர்கள் 5 பேர் சௌகர்யமாக அமரக்கூடிய அளவுக்கு இருக்கை வசதி உள்ளது.
நிகழ்ச்சியின் போது ஹோண்டா மோட்டார் நிர்வாக துணை தலைவர் கொய்ச்சி கோண்டா கூறுகையில், 'காம்பாக்ட் கார் துறையில் இந்திய சந்தை தான் மையப் பகுதியாக திகழ்கிறது.
அதேபோல் சிறிய ரக கார்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கும் இந்தியா ஏற்றவகையில் உள்ளது.
தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய கான்செப்ட் கார் உலக தரத்தில் இருக்கும். குறிப்பாக இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அமையும். 2011ல் இந்த மாடலை அறிமுகப்படுத்த உள்ளோம்' என்றார்.


Click it and Unblock the Notifications








