பிரேக் பெயிலியர்... 4,10,000 கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா!

ஹோண்டா நிறுவனமும் இப்போது பெருமளவில் கார்களை வாடிக்கையரிடமிருந்து திரும்பப் பெறுவது குறித்து அறிவித்து வருகிறது.
ஏற்கெனவே 9 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற்றது ஹோண்டா. இந்த முறை மேலும் 4 லட்சத்து 10 ஆயிரம் ஒடிஸ்ஸி மற்றும் எலிமெண்ட்ஸ் மாடல் மினி வேன்கள் மற்றும் ட்ரக்குகளை திரும்பப் பெறுகிறது இந்த நிறுவனம். பிரேக் பெயிலியர்தான் இதற்கு காரணம் என்றும் அறிவித்துள்ளது.
இந்த வாகனங்களின் பிரேக் பெடல்கள் மிகவும் மென்மையாக இருப்பதோடு, வண்டியின் அடிப்பாகம் வரை அழுத்த வேண்டியுள்ளதாம். இதனால் அவசர நேரத்தில் பிரேக் போடுவது மிகவும் கடினமாக உள்ளதாம்.
இந்தப் புகார்கள் கணிசமாக வந்ததைத் தொடர்ந்து ஒடிஸ்ஸியில் 3,44,000 கார்களையும், எலிமெண்டில் 68,000 கார்களையும் திரும்பப் பெற்று குறைகளைச் சரிசெய்யப் போகிறதாம் ஹோண்டா.
உலகம் முழுவதும் 8 மில்லியன் கார்கள் மற்றும் இதர வாகனங்கள் பல்வேறு குறைபாடுகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








