இந்தியாவில் 8500 செடான் கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா!

இந்த ரகக் கார்களில் பவர் விண்டோ சுவிட்ச்சில் தொடர்ந்து பிரச்சினை இருப்பதாலும், இதுவே கார் எரிந்து போகும் அளவுக்கு ஆபத்தைத் தோற்றுவிப்பதாலும் இவற்றை திரும்பப் பெறுகிறதாம் ஹோண்டா.
2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செடான்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டு, பிரச்சினை சரி செய்யப்பட்ட பிறகு தரப்படுமாம். புதிதாக தயாரிக்கப்பட்ட செடான்களில் இந்த பிரச்சினை இல்லை என்று கூறப்படுகிறது.
இதே பிரச்சினை, ஹோண்டாவின் மற்ற மாடல்களான ஃபிட் மற்றும் ஜாஸ் கார்களிலும் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவு உலகம் முழுவதும் ஓடிக் கொண்டுள்ள 6,46,000 கார்களை ஹோண்டா திரும்பப் பெறுகிறது.
சமீபத்தில்தான் டொயோட்டா நிறுவனம் தனது 8 மாடல்களில் விற்கப்பட்ட 18 லட்சம் கார்களை அமெரிக்காவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








