ஹூண்டாய் கார் ஏற்றுமதி 52 சதவீதம் வீழ்ச்சி!

கடந்த ஆண்டு நவம்பரில் உள்நாட்டில் 28,162 கார்களை விற்றிருந்தது ஹூண்டாய். இது இந்த ஆண்டு 31,540 யுனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த விற்பனை 19.4 சதவீதம் உயர்ந்து 55,241 யூனிட்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டு இது 44,542 ஆக இருந்தது.
ஆனால் ஏற்றுமதியில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது ஹூண்டாய். 52 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது இந்த மாதம் மட்டும். கடந்த நவம்பரில் 27079 கார்களைஏற்றுமதி செய்து சாதனை படைந்த ஹூண்டாய், இந்த ஆண்டு 13,002 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த நிலை டிசம்பரில் மாறும் என நிறுவனம் எதிர்ப்பார்ப்பதாக ஹூண்டாய் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் அரவிந்த் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஏ 2 பிரிவு கார்களான ஐ 10, ஐ 20 ஆகியவற்றின் விற்பனை எண்ணிக்கை 40,347. ஏ 3 பிரிவில் ஆக்ஸன்ட் 4142 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. ஏ 5 காரான சோனாட்டா ட்ரான்ஸ்பார்ம் 14 கார்களும், சான்டா பே எனும் சொகுசு கார் 39-ம் விற்பனையாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








