10000 கார் தயாரித்த சென்னை பிஎம்டபுள்யூ தொழிற்சாலை

BMW Chennai
சென்னை: சென்னையில் உள்ள பிஎம்டபுள்யூ தொழிற்சாலை அன்மையில் 10 ஆயிரமாவது காரை தயாரித்து முடித்தது.

இந்த தொழிற்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் துவங்கப்பட்டது. இந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் கார் தயாரித்துள்ளதால் அங்கு விழாக்கோலமாக உள்ளது.

இது குறி்த்து பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது,

இங்கு பணிபுரிபவர்கள் தொடர்ந்து திறமையாகச் செயல்பட்டு இந்நிறுவனத்தை இந்திய கார் சந்தையில் முக்கிய இடத்தில் வைப்பார்கள். இந்த தொழிற்சாலை கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இங்கு பிஎம்டபுள்யூ 3 சீரீஸ், 5 சீரீஸ் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இறுதியில் பிஎம்டபுள்யூ நிறுவனம் பிஎம்டபுள்யூ எக்ஸ் 1 காரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. சென்னை தொழிற்சாலை ஒரு ஷிப்டில் ஆண்டுக்கு 5400 கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டது.

இந்த ஆண்டின் இறுதியில் கூடுதலாக 400 பேர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். தற்போது ரூ. 1.1 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதை இன்னும் 2 ஆண்டுகளில் ரூ. 1.8 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. பிஎம்டபுள்யூ நிறுவனம் குர்கானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதன் முதலாக பிஎம்டபுள்யூ நிறுவனம் பிரீமியம் கார் பிரிவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. புதிய தயாரிப்புகளின் மூலம் இதை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறோம்.

புதிய கார்களை அறிமுகப்படுத்துவதின் மூலம் வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனைத் திறன் அதிகரிக்கும். அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர டீலர் நெட்வொர்கை விரிவுபடுத்தவிருக்கிறோம். அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் பெரு நகரங்களில் 22 டீலர்கள் இருப்பார்கள். டீலர் மற்றும் விற்பனை நெட்வொர்கின் மூலம் 1200-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும் என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, November 26, 2010, 15:37 [IST]
English summary
The celebration time was agog in the camps of BMW Chennai assembly line as the facility has just released the 10000th unit. The facility is to complete its 4 years of operation in Chennai and the MD of the plant said the moment has been a mark of pride and joy. The facility feels much elated over the creation of this new milestone and takes the opportunity to have a conviction to meet the demands of the ensuing days in Indian market. T
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+