இந்தியாவில் கார் விற்பனை 31% - மோட்டார் சைக்கிள் 30% உயர்வு

Cars
டெல்லி: இந்தியாவில் பயணிகள் கார் விற்பனையில் 31 சதவீத உயர்வு காணப்பட்டுள்ளது. அதேசமயம், மோட்டார் சைக்கிள்கள் விற்பனையிலும் 30 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 1,41,184 ஆகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 1,07,948 ஆக இருந்தது.

அதேபோல மோட்டார் சைக்கிள்களின் விற்பனையும் உயர்வு கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5,50,830 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகிருந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இது 7,15,985 ஆக விற்பனையானது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாகனங்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 36,222 வாகனங்களாக இருந்தது. இந்த ஆண்டு 52,211 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 44.14 சதவீத உயர்வாகும்.

அனைத்து வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 31.42 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 8, 2010, 13:11 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+