டொயோடா கொரோலாவின் ஆல்டிஸ் டீசல் கார்!

இதன் மூலம் கொரோலா ஆல்டிசின் விற்பனை 800ல் இருந்து 1100 யூனிட்களாக அதிகரிக்கும். டீசல் ஆல்டிசின் அறிமுகம் இந்த விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் துணை தலைவர் கூறினார்.
இதற்கிடையே, டீசல் இன்ஜின் பிரிமியம் செடான் ரக கார்களின் விற்பனை, குரூஸ் காரின் அறிமுகத்திற்கு பின் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் அங்குஷ் அரோரா தெரிவித்தார்.
ஹோன்டா சிவிக், ஸ்கோடா லாரா, வோல்க்ஸ்வேகன் ஜெட்டா ஆகிய கார்கள் பிரிமியம் செடான் பிரிவில் ரூ. 10 முதல் 15 லட்சம் வரையில் கிடைக்கிறது. நாட்டின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாதமும் சுமார் 3000 கார்கள் விற்பனையாகின்றன. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் உயரும் என நம்பப்படுகிறது.
1.4 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ள கொரோலா ஆல்டிஸ் கார், எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும். தற்போது டீசல் கார்களுக்கே அதிக கிராக்கி உள்ளதால் டொயோடா கொரோலா ஆல்டிஸ் மக்களை கவரும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








