பெட்ரோலுடன் எல். பி. ஜி./சி. என். ஜி. உள்ள கார்களின் கிராக்கி அதிகரிக்கும்

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி விற்பனையில் வெளுத்துக் கட்டும் ஆல்டோ, வேகன் ஆர் உட்பட 5 கார்களுக்கு இரட்டை எரிபொருள் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. மற்ற முன்னணி கார் தயாரிப்பாளர்களான ஹூன்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவையும் சி.என்.ஜி கார்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாற்று எரிபொருள் கார்கள் சந்தை வரும் காலத்தில் விரிவடையும் என்று பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனென்றால், பெட்ரோல்- சி.என்.ஜி கார்களுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ. 1.31 ம், பெட்ரோல்-எல்.பி.ஜி கார்களுக்கு ரூ. 2.23 ம் தான் செலவாகும். ஆனால், பெட்ரோலை மட்டும் பயன்படுத்தினால் ரூ. 3.44 ம், டீசல் பயன்படுத்தினால் ரூ. 2.35 ம் செலவாகும்.
மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சேமிக்க சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி. கார்களை தான் விரும்புவார்கள் என்கிறார்கள் அவர்கள்.
விற்பனையாகும் கார்களில் 15-20 சதவீத கார்கள் இரட்டை எரிபொருள் மாடல் கார்கள் தான். ஜெனரல் மோட்டார்ஸ் நி்றுவனம் தனது ஸ்பார்க் மினி காருக்கு எல். பி. ஜி.யையும், ஆப்ட்ரா மற்றும் ஏவியோ செடான் கார்களுக்கு சி. என். ஜி.யையும் அளிக்கிறது.
ஷெவர்லே பீட் எல்.பி.ஜி. உள்ளிட்ட பிற மாடல்களுக்கும் இரட்டை எரிபொருள் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் இந்தியாவிற்கான விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications