ரூ. 5 லட்சம் கார் பிரிவில் மினி சைலோவை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

பிரிமியர் ரியோவின் வெற்றியை மஹிந்திரா பார்த்திருக்கக்கூடும். அதனால் தான் மினி சைலோ எஸ்.யு.வி. காரை அறிமுகப்படுத்தவுள்ளது. 5 சீட்கள் உள்ள ஹாட்ச் பேக் கார்களான பிகோ, போலோ, புன்டோ, இன்டிகா விஸ்டா போன்ற கார்களை வாங்க விரும்புவோருக்கு இந்த கார் ஏற்றதாகும். எஸ்.யு.வி. கார்கள் அவற்றை வைத்திருப்பவர்களுக்கு பெருமையையும், பயனத்தில் சௌகரியத்தையும் அளிக்கின்றன.
விலைக்கேற்ற மாதிரி இந்த மினி சைலோவிற்கு மஹிந்திரா சிறிய இன்ஜினை பயன்படுத்தும். மஹிந்திரா லோகனின் இன்ஜினை உபயோகிக்கலாம். இந்த நிறுவனம் சைலோவை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. மினி சைலோ வெற்றி அடையுமா? பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








