சிறிய கார் தயாரிப்பு-மாருதியின் உதவியை நாடும் வோல்க்ஸ்வேகன்

ஜப்பானில் உள்ள சுசுகி நிறுவனத்தின் 19 சதவிகித பங்குகள் வோக்ஸ்வேகனிடம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மாருதி சுசுகியின் பெரும்பான்மையான பங்குகள் ஜப்பான் சுசுகியின் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டீசல் என்ஜின் தயாரிக்க மாருதி வோக்ஸ்வேகனிடம் ஆலோசனை கேட்கும். அல்லது ஜெர்மன் கார் தயாரிப்பாளரான உல்ப்ஸ்பர்கிடம் இருந்து என்ஜின்களை வாங்கும் என்று தெரிகிறது.
சுசுகியின் தலைவர் ஒசாமு சுசுகி இந்த மாத இறுதிக்குள் இந்தியாவிற்கு வந்து
வோக்ஸ்வேகன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் பிறகு இந்த இரு நிறுவனங்களும் கூட்டாகச் சேர்ந்து குறைந்தது 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








