ஔரங்காபாத்தில் 150 கார்களை விற்று மெர்சிடீஸ் பென்ஸ் புதிய சாதனை

பாரம்பரிய சின்னங்களுக்கு பெயர் போன நகரமான ஔரங்காபாத், தற்போது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவிற்கு மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு தனது கதவுகளைத் திறந்துள்ளது.
டயர் தயாரிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள ஔரங்கபாத்தில் மட்டும் 150 கார்களை விற்பனை செய்துள்ளது மெர்சிடீஸ். இதனை கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனம் அறிவித்தது.
ஔரங்காபாத்தைச் சேர்ந்த இளம் தொழில் அதிபர்கள் தங்கள் நகரத்தை உலக வரைபடத்தில் முக்கியத்துவம் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்பினர். அதற்கு முதல் கட்டமாக, இந்திய கார் சந்தையில் இருக்கும் சிறந்த சொகுசு காரை வாங்க திட்டமிட்டனர். அதற்கு அவர்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் காரைத் தேர்ந்தெடுத்தனர்.
இது குறித்து மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியாவின் தலைவர் டாக்டர் விலப்ரெய்ட் ஆல்பர் கூறுகையில், "மெர்சிடிஸ் வேண்டும் என்று கருதிய ஔரங்காபாத்தைச் சேர்ந்த 150 பேரின் கனவை நாங்கள் நினைவாக்கிவிட்டோம். என்னைப் பொருத்த வரையில் நவீனத்துக்கு மாறிவரும் இந்தியாவின் சிறந்த எடு்த்துக்காட்டு ஔரங்காபாத் தான். இந்த சாதனையால் ஐரங்காபாத்தின் இமேஜ் அதிகரித்துள்ளது", என்றார்.


Click it and Unblock the Notifications








