தாய்லாந்தில் மினி டிரக்கை அறிமுகப்படுத்தும் டாடா: அடுத்தது கார்

இது தவிர மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் கால் பதிக்க டாடா நிறுவனம் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தாய்லாந்து சர்வதேச மோட்டார் எக்ஸ்போவில் கலந்து கொண்ட டாடா மோட்டார்ஸின் தாய்லாந்து சிஇஓ அஜித் வெங்கடராமன் கூறியதாவது,
தாய்லாந்து கார் சந்தையில் நாங்கள் விரைவில் நுழையவிருக்கிறோம். சிறிய கார்கள் இங்கு பிரபலம். இன்னும் 2 ஆண்டுகளில் கார் சந்தையில் அடியெடுத்து வைப்போம் என்று நினைக்கிறோம் என்றார்.
நடுத்தரம் மற்றும் கனரக கமர்ஷியல் வாகனப் பிரிவுகளிலும் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனம் ஒரு மாத்தில் 150 ஏஸ் சூப்பர் ஜெயின்ட் டிரக்குகளை விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டாடா மோட்டார்ஸின் தாய்லாந்து ஜெனரல் மேனேஜர் சாம்பாங் போல்சிட்சரூன் கூறினார்.


Click it and Unblock the Notifications








