10 மாடல் டிப்பர், டிரெய்லர் லாரிகளை அறிமுகப்படுத்தும் அஷோக் லேலண்ட்
மும்பை: இந்தியாவின் முன்னணி கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம் புதிதாக 10 மாடல் டிப்பர் மற்றும் டிரெய்லர் லாரிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியாவின் வாகனத் தயாரிப்பாளர்களில் முன்னோடியாகத் திகழ்வது ஹிந்துஜா குரூப்-இன் அசோக் லேலண்ட் நிறுவனம். இது புதிதாக 10 மாடல் டிப்பர் மற்றும் டிரெய்லர் லாரிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
யு டிரக்கை அடிப்படையாகக் கொண்டு புதிதாக 10 மாடல் டிப்பர் மற்றும் டிரெய்லர் லாரிகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
இந்த மாடல்கள் அனைத்தும் இந்திய சந்தையில் 16 முதல் 49 டன் பிரிவில் விற்கப்படும். இவை அடுத்த 6 வார காலம் முதல் 1 ஆண்டு வரை ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
இந்த புதிய மாடல்களைச் சேர்த்தால் இந்திய சந்தையில், டிரக் பிரிவில் 15 மாடல்கள் இருக்கும்.


Click it and Unblock the Notifications








