இந்தியாவில் இந்தாண்டு 5000 செடன் கார்களை விற்க பிஎம்டபிள்யூ இலக்கு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிஎம்டபிள்யூ கார்கள் நல்ல விற்பனையை சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு 3600 கார்களை விற்றிருந்தது பிஎம்டபிள்யூ. இந்த ஆண்டு 5000 கார்களுக்கு அது இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் சொகுசு கார்களின் விற்பனை சிறப்பாக உள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ கார்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 750 பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனையாகியுள்ளன. தனி நபர்களால் வாங்கப்பட்டவை இவை. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இவ்வளவு அதிக கார்கள் ஒரே மாதத்தில் விற்பனையானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நாங்கள் 3600 கார்களை விற்றிருந்தோம். இந்த ஆண்டு இதுவரை 4721 கார்களை விற்றுள்ளோம். 5000 கார்களுக்கு மேல் விற்பனையாகும் என்ற நம்பிக்கை உள்ளது. டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்த இலக்கைத் தாண்டி விடுவோம் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








