இந்தியாவில் ஜூலை மாதத்தில் கார் விற்பனை அமோகம்

By
Domestic car sales july
டெல்லி: கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் பயணிகள் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பெருமளவில் விற்று சாதனை படைத்துள்ளது.

ஜூலை மாதத்தில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 12 லட்சத்து 37 ஆயிரத்து 461 ஆக இருந்தது. இது கடந்த மார்ச் மாத விற்பனையை விட அதிகமாகும்.

இதுதொடர்பாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை...

ஜூலை மாதத்தில் ஆட்டோமொபைல் பிரிவில் விற்பனை அளவு 31.50 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனை அளவு 9,41,070 ஆக இருந்தது. அதுவே இந்த ஆண்டு ஜூலையில் 12,37,461 ஆக எகிறியுள்ளது.

பயணிகள் கார், ஸ்கூட்டர், மொபெட் பிரிவில் ஏற்பட்டுள்ள நல்ல வளர்ச்சியே இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணம். ஏராளமான புதிய மாடல்களின் வருகை, ஊரக சந்தைகளிலும் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம், எளிதில் கிடைக்கும் கடன் வசதி ஆகியவையும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம்.

இந்த ஆண்டில் கடந்த மார்ச் மாதத்தில் 12,26,944 கார்கள், பைக்குகள் விற்பனையானதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை ஜூலை மாத விற்பனை முறியடித்துள்ளது.

ஜூலை மாதத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்து 58 ஆயிரத்து 764 ஆகும். இது மார்ச் மாதத்தில் 1,55,600 ஆக இருந்தது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் உள்ளூர் விற்பனை 26.83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலையில் 76,111 கார்களை விற்றுள்ளது மாருதி. ஹூண்டாய் நிறுவனம் 28,811 கார்களை விற்று 24.22 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் 24,613 கார்களை விற்று 69.31 சதவீத உயர்வைப் பார்த்துள்ளது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை ஜூலையில் 9,38,514 ஆக இருந்தது.

ஹீரோ ஹோன்டா நிறுவனம் 3,89,795 மோட்டார் சைக்கிள்களை விற்று 13.96 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை அளவு 1,92,138 ஆக இருந்தது. இது 76.01 சதவீத உயர்வாகும்.

சென்னையைச் சேர்நத் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 43,888 மோடடார் சைக்கிள்களை விற்று 37.51 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.

ஸ்கூட்டர் பிரிவில் மொத்தம் 1,67,195 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது 35.65 சதவீத உயர்வாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 9, 2010, 13:16 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+