க்ரூஸ், பீட் கார்களுக்கு அதிக கிராக்கி: உற்பத்தியை அதிகரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்

பீட் ஹாட்ச் பேக் கார் ஆகும். க்ரூஸ் சொகுசு செடான் கார் ஆகும். அதிகரிக்கும் கிராக்கியை சமாளிக்கும் வகையில் டாலேகான் மற்றும் ஹலோலில் 2-வது ஷிப்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
உற்பத்தி திறன் ஒவ்வொரு மாதமும் 6,000-ல் இருந்து 12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய துணை தலைவர் பி. பாலேந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறு உற்பத்தியை இரண்டு மடங்காக்குவதன் மூலம் நாடெங்கும் அதிகரிக்கும் கிராக்கியை சமாளிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். நிலுவையில் உள்ள பீட் மற்றும் க்ரூஸ் கார்கள் இந்த மாதத்திற்குள் விநியோகம் செய்யப்படும்.
ஒவ்வொரு வருடமும் டாலேகான் மற்றும் ஹலோல் தொழிற்சாலைகளில் 2, 25, 000 கார்கள் தயாரிக்கப்படுகின்றது.
குஜராத்தில் உள்ள ஹலோல் தொழிற்சாலை வருடத்திற்கு 85, 000 கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டது. பூனே அருகில் உள்ள சிறிய ரக கார்கள் தயாரிக்கும் டாலேகான் தொழிற்சாலையில் வருடத்திற்கு 1.4 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








