ஆகஸ்டில் 1,04,791 கார்களை விற்ற மாருதி விற்பனையில் புதிய சாதனை

By
Maruti August Sales
மும்பை: மாருதி சுசுகி நிறவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,04,791 கார்களை விற்று புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 84,808 கார்களை விற்பனை செய்தது. இதற்கு முன்னர் கடந்த மே மாதம் 1,02,175 கார்கள் விற்றது தான் அப்போதைய பெரிய சாதனையாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாத விற்பனையின் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் மட்டும் கடந்த மாதம் 92,674 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 69,961 கார்கள் தான் விற்கப்பட்டது. ஆனால் மாருதி 800 கார்களின் என்ஜினை மேம்படுத்தாததால் அதன் விற்பனை 1,919-ஆக குறைந்துள்ளது.

மாருதியின் விற்பனையில் பெரும் பங்கு ஏ2 பிரிவிற்கு உண்டு. இந்த பிரிவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்ற 52,473 கார்களை விட 25.69 சதவிகிதம் அதிகரித்து இந்த ஆண்டு ஆகஸ்டில் 65,953 கார்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், ஏ3 பிரிவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் விற்பனையான 7,821 கார்களை விட 33.99 சதவிகிதம் அதிகரித்து 10,479 கார்கள் விற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 4, 2010, 10:02 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+