நாடெங்கும் ஸ்டாக் யார்டுகளை உருவாக்குகிறது மாருதி

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி, ஆல்டோ, வேகன் ஆர்., ஸ்விப்ட் போன்று நன்கு விற்பனையாகும் கார்களை வாங்க மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் நாடெங்கும் வாகன இருப்பு வைக்குமிடஙகள் கட்ட திட்டமிட்டுள்ளது.
அந்த வரிசையில், தனது முதல் இருப்பு வைப்பிடத்தை பெங்களூரில் திறக்கவுள்ளது. இதற்கான நிலத்தை ஏற்கனவே வாங்கிவிட்டது.
நாடெங்கும் இருப்பு வைக்குமிடஙகள் கட்டுவதற்காக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது மாருதி. இந்த நடவடிக்கை ஸ்விப்ட், ஸ்விப்ட் டிசையர், குறைந்த விலை எம.பி.வி. மாருதி ஈகோ கார்களு்க்காக மக்கள் 3-4 மாதங்கள் காத்திருந்து விட்டு பிற பிராண்டிற்கு போகாமல் தடுக்க உதவும்.
மாருதி நிறுவனம் தனது டீலர்ஷிப்பை அதிகரிப்பதிலும் குறியாக உள்ளது. மேலும், வியாபாரத்தை விரிவுபடுத்த கிராமப்புற மார்க்கெட்டுகளில் அதிக கவனம் செலுத்துகிறது.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பிராந்தியங்களுக்கு ஒன்றாக 4 இருப்பு வைக்குமிடங்கள் கட்டப்படவுள்ளது என்று அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மக்கள் கேட்கும் குறிப்பிட்ட மாடலும், கலரும் டீலரிடம் இல்லாத போது தான் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது. இந்த இருப்பு வைக்குமிடஙகள் மூலம் டீலர்களுக்கு விரைவாக கார்கள் அனுப்பப்பட்டு காத்திருக்கும் நேரம் குறையும் என்று நம்புகிறது மாருதி.
பெங்களூர் இருப்பு வைக்குமிடம் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும். இதன் மூலம் பெங்களூரில் உள்ள டீலர்ஷிப்களை அதிகரிக்க முடியும் என அது நம்புகிறது.


Click it and Unblock the Notifications








